3-வது டெஸ்ட் கிரிக்கெட்: 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா போராடி தோல்வி!

Published On:

| By Mathi

India England Cricket Match

இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. India England Test Match

இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 387 ரன்கள் எடுத்து சம நிலையில் இருந்தன. 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து சுருண்டது.

இதனால் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஜூலை 13-ந் தேதியன்று ஆட்ட நேர முடிவில் 58 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ADVERTISEMENT

இறுதி நாளிலும் இந்திய அணி மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இந்திய அணியின் ஜடேஜா மட்டுமே தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவருடன் பும்ரா இணைந்து ஸ்கோரை உயர்த்த உறுதுணையாக நின்றார்.

ஆனாலும் இந்திய அணியின் போராட்டம் வீணானது. 170 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது இந்திய அணி. இதனால் இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share