ரஜினிகாந்துடன் சு.வெங்கடேசன் திடீர் சந்திப்பு! 3 மணி நேரம் ஆலோசனை!

Published On:

| By Mathi

Su Venkatesan Meets Rajinikanth

நடிகர் ரஜினிகாந்தை CPI(M) எம்.பி. சு.வெங்கடேசன் கடந்த வாரம் சந்தித்து 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

மதுரை மக்களவைத் தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசன் அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை சந்தித்து பேசியிருந்ததை நமது மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.

ADVERTISEMENT

நாடாளுமன்ற வளாகத்தில் சக தமிழக எம்.பி.க்களிடம் சு.வெங்கடேசன் பேசுகையில், “விஜய்யை பாஜக கூட்டணி பக்கம் செல்லவிடாமல் தடுக்கத்தான் சந்தித்து பேசினேன்” என கூறியிருந்தார். அத்துடன் சில கட்சித் தலைவர்களை சந்திக்கும் போது, “விஜய் சிறப்பாக செயல்படுகிறார்.. அவரைப் பற்றிய உங்கள் ஒப்பீனியன் என்ன தோழர்?:” எனவும் கேள்விகளைக் கேட்டிருந்தார் சு.வெங்கடேசன் எனவும் நாம் எழுதியிருந்தோம்.

இந்நிலையில் கடந்த வாரம் சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சு.வெங்கடேசன் சந்தித்து பேசினார்.

ADVERTISEMENT

இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரம், சட்டமன்ற தேர்தல் களம், விஜய்யின் அரசியல் உள்ளிட்டவை குறித்து இருவரும் சுமார் 3 மணி நேரம் விவாதித்தனர்.

இந்த சந்திப்பு முடிந்த பின்னர், சு.வெங்கடேசனை வாசல் வரை வந்து ரஜினிகாந்த் வழியனுப்பி வைத்தார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share