சத்தீஸ்கரில் 27 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை- மத்திய அரசுக்கு CPI, CPI(M) கண்டனம்

Published On:

| By Minnambalam Desk

Maoists

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 27 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. CPI, CPI(M) Condemn Centre Over Killing of 27 Maoists in Chhattisgarh

சிபிஎம் கட்சியின் பொலிட்பீரோ இன்று வெளியிட்ட அறிக்கை: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுண்ட்டரில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் பொதுச்செயலாளர் நம்பல கேசவ ராவ் உட்பட 27 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சிபிஎம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

ADVERTISEMENT

மாவோயிஸ்டுகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பல முறை வேண்டுகோள் விடுத்தனர். மத்திய அரசும் சத்தீஸ்கரில் ஆளும் பாஜக அரசும் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வழிமுறையை பின்பற்றாமல், மனிதாபிமானமற்ற படுகொலைகள், அழித்தொழிப்பு வழிமுறையை பின்பற்றுகின்றன.

மாவோயிஸ்டுகளை அழிக்கும் காலக்கெடுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமது அறிக்கையில் உறுதி செய்கிறார்; சத்தீஸ்கர் முதல்வரோ, பேச்சுவார்த்தை கிடையாது என்கிறார். மனித உயிர்கள் பலியாவதை கொண்டாடுவது பாசிச மனநிலை; ஜனநாயகத்துக்கு எதிரானது.

ADVERTISEMENT

நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் மாவோயிஸ்டுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மாவோயிஸ்டுகளின் அரசியலை சிபிஎம் கட்சி எதிர்க்கிற போதும், பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிற மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும்; மாவோயிஸ்டுகளுக்கு எதிரான பாதுகாப்பு படையினரின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். இவ்வாறு சிபிஎம் பொலிட் பீரோவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சிபிஐ வெளியிட்ட அறிக்கையில், சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் மூத்த தலைவர் மற்றும் ஆதிவாசிகள் கொடூரமாக படுகொலை செய்யபட்டுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவிக்கிறது. சத்தீஸ்கரில் மேற்கொள்ளப்பட்டு வரும் Operation Kagar நடவடிக்கை தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share