இந்தியாவில் உயரும் கொரோனா பலி எண்ணிக்கை!

Published On:

| By christopher

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று முன்தினம் 11,692 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 12,193 ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,69,684ல் இருந்து 4,48,81,877 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 66,170 லிருந்து 67,556 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நேற்று முன் தினம் அதிகபட்சமாக 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்ப்ர உயிரிழந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,258ல் இருந்து 5,31,300 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து ஒரேநாளில் 10,765 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

ரமலான் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து!

கர்நாடக தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்களுக்கு எதிராக எடப்பாடி கடிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share