இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7,154 ஆக உயர்வு- உயிரிழப்பு எண்ணிக்கை 77

Published On:

| By Minnambalam Desk

Covid19

இந்தியாவில் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் இன்று காலை 8 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,154 ஆக உயர்ந்துள்ளது. COVID-19 Cases Rise to 7,154 in India; Death Toll Reaches 77

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவாக 2,165 ஆக பதிவாகி இருக்கிறது. குஜராத்தில் 1,281; டெல்லியில் 731 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 231 ஆக உள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் இன்று காலை 8 மணி வரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முக கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share