ADVERTISEMENT

பாம்பன் பள்ளிவாசல் தார்ப்பாய் அகற்றம்… காவல்துறை விளக்கம்!

Published On:

| By Selvam

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாம்பன் பள்ளிவாசல் கோபுர மினாராவில் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது தார்ப்பாய் அகற்றப்பட்டுள்ளது. Pamban police clarifies mosque

பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ராமேஸ்வரம் பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்கிறார். இந்தநிலையில், மோடி வருகையை ஒட்டி பாம்பன் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் கோபுர மினாராவில் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டதாக இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் ரஹீம், எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக, மோடி வருகை… பாம்பனில் தார்ப்பாய் கொண்டு மூடப்படும் பள்ளிவாசல் என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் இன்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில், பாம்பன் பள்ளிவாசல் மினாராவில் தார்ப்பாய் அகற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மண்டபம் காவல் ஆய்வாளர் சரிதாபானு கடந்த மார்ச் 16-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில்,

ADVERTISEMENT

“பாம்பன் ஜாமியா மஸ்ஜித் பெரிய பள்ளிவாசலில் 31.03.2025-ம் தேதி நோன்பு பெருவிழாவை முன்னிட்டு பள்ளிவாசல் கோபுர மினாராவில் அலங்கார விளக்கு பலகை ஏற்றப்பட்டுள்ளது. அந்த அலங்கார விளக்கு பலகையானது மினாராவின் சுமார் 50 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்த அலங்கார விளக்கு பலகையினை இவ்வளவு உயரத்தில் வைப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனுமதியினை பெற்றிருக்க வேண்டும். இருப்பினும் எந்தவித முன்அனுமதியும் பெறாமல் அதிகமான உயரத்தில் இந்த விளம்பர பலகையை அமைத்திருப்பது சட்ட விதிமீறலாகும்.

ADVERTISEMENT


மேலும், இந்த பள்ளிவாசல் மினாரா அமைந்திருக்கும் பகுதியானது பாம்பன் மேற்கு வடக்கு, தெற்கு, கடற்கரைக்கு மிக அருகில் உள்ளதால் சுமார் 1/2 கி.மீட்டருக்கு அப்பால் இருந்து பார்க்கும்போது அந்த விளம்பர பலகையின் தோற்றம் ஒரே விளக்காகவும் கலங்கரை விளக்கின் தோற்றத்தைப் போலவும் தோற்றமளிக்கிறது.

அதனால் அதிகமான மீன்பிடி படகுகளும், கப்பல் போக்குவரத்தும், நாட்டுப்படகுகளும் சென்று வரக்கூடிய பகுதியில் படகுகள் மற்றும் கப்பல் போக்குவரத்திற்கு (Nevigation Problem ) மிகவும் இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் இருந்து விபத்து ஏற்படக்கூடிய வகையிலும் அமைந்துள்ளதால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் முன் அனுமதி பெற்று இந்த அலங்கார மின்விளக்கு பலகையினை வைத்துகொள்ள இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், மேற்கூறிய செயல் முறை ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள செயல் ஆணைகளை மீறும் பட்சத்தில் தங்கள் மீது சட்டப்படியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், பள்ளிவாசல் மினாராவில் தற்போது தார்ப்பாய்கள் அகற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில், “பாம்பன் பள்ளிவாசல் மினராவில் ஒளிரும் எழுத்துக்கள், கடற்படை கேட்டுக்கொண்டதை அடுத்து அதனை அகற்ற அறிவுறுத்தப்பட்டு, தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டது.

தற்போது தார்ப்பாய் அகற்றப்பட்டுள்ளது. எனினும், உயர் கோபுரங்களில் விளக்குகள் பொருத்தும் போது, கலங்கரை விளக்கம் போல தோற்றமளித்து, கப்பல் மற்றும் படகுகளுக்கு சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக காவல்துறையில் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Pamban police clarifies mosque


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share