பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் இன்று (ஜூலை 26) நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த மே 4-ஆம் தேதி சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து கஞ்சா வழக்கு, பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் தொடர்ந்த வழக்கு என சவுக்கு சங்கர் மீது ஏழு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ஜாமீன் கோரி கோவை 4-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக கரூரில் பணமோசடி செய்த வழக்கு மற்றும் குண்டாஸ் வழக்கில் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழல் உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தன்னுயிரை கொடுத்து குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய டிரைவர்: வீடுதேடிச் சென்ற அமைச்சர்கள்!