பஸ்சில் மூட்டை கடி…நீதிமன்ற உத்தரவால் பீதியடைந்த ரெட் பஸ் ஆப்!

Published On:

| By Kumaresan M

பேருந்தில் சென்ற போது மூட்டை கடியால் அவதிப்பட்ட பெண்ணுக்கு 1.29 லட்சம் இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களுருவை சேர்ந்தவர் தீபிகா சுவர்ணா. இவர் தனது கணவருடன் மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு செல்ல ரெட் பஸ் ஆப் வழியாக டிக்கெட் புக் செய்துள்ளார். கன்னட சேனல் ஒன்றில் ரியாலிடிட்டி ஷோவில் பங்கேற்பதற்காக இருவரும் பெங்களூரு சென்றுள்ளனர்.

சீ பேர்ட் என்ற தனியார் பேருந்தில் பயணித்துள்ளனர். பேருந்தில் ஏறி பார்த்தால் பராமரிப்பே இல்லாமல் மோசமான நிலையில் இருந்துள்ளது. சீட்டில் மூட்டை பூச்சிகள் இருந்து இருவரையும் நன்றாக கடித்து வைத்துள்ளன. இதன் காரணமாக இருவரும் உறங்க முடியாமல் தவித்துள்ளனர். பேருந்து ஊழியர்களிடத்தில் புகார் செய்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

இதையடுத்து, கன்னட மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தீபிகா வழக்கு தொடர்ந்தார். அதில், இரவு முழுவதும் சரியாக உறங்க முடியாததால், ரியாலிட்டி ஷோவில் தங்களால் சிறப்பான முறையில் செயல்பட முடியவில்லை. இதன் காரணமாக எங்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டது என்று கூறியிருந்தார். மூட்டை பூச்சி கடியால் தன் உடலில் ஏற்பட்ட பாதிப்பையும் ஆதாரத்துடன் சமர்ப்பித்திருந்தார்.

இதையடுத்து, நீதிமன்றம் பேருந்து மற்றும் ரெட் பஸ் ஆப்புக்கு 1,29 லட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. அதோடு வழக்கு செலவுக்கு 10 ஆயிரம் மற்றும் டிக்கெட் கட்டணம் 850 ஆகியவற்றையும் வழங்க உத்தரவிடப்பட்டது.

பேருந்தில் பயணிக்கும் போது, அசவுகரியங்கள் நடந்தால் தயங்காமல் நுகர்வோர் நீதிமன்றத்தை நாட வேண்டும். அப்போதுதான், தவறிழைப்பவர்களுக்கு பாடம் கற்று கொடுக்க முடியும். ஆனால், பலரும் பணமும் கொடுத்து விட்டு வசதி குறைவாக இருந்தாலும் கண்டு கொள்ளாமல் போய் விடுகின்றனர். இதனால், தவறிழைப்பவர்களுக்கு பயம் என்பது இல்லாமல் போய் விடுகிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

“ஆண்ட பரம்பரை” : அமைச்சர் மூர்த்தியின் பேச்சு வைரல்!

போலீஸ் அனுமதி மறுப்பு : தடையை மீறி சவுமியா அன்புமணி போராட்டம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share