திமுகவுக்கு கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது : என்.டி.ஏ முதல் கூட்டத்தில் மோடி பேச்சு 

Published On:

| By Kavi

திமுகவுக்கு கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 23) தமிழகம் வந்தடைந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசி வருகிறார். 

ADVERTISEMENT

பாரத் மாதா கி ஜே என தனது வழக்கமான பாணியில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி,  ‘எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன் என கூட்டணி கட்சித் தலைவர்களை வரவேற்று பேசினார். 

தொடர்ந்து அவர்,  “எனக்கு 2026ல் தமிழ்நாட்டின் முதல் பயணம் இது. சில நாட்களுக்கு முன் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை நாம் கொண்டாடினோம்.  இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள். இந்தநாளை பராக்கிரம திருநாள் என்ற வகையில் கொண்டாடி மகிழ்கிறோம். நேதாஜியோடு சேர்ந்து சுதந்திர போரில் பலர் பங்கெடுத்தார்கள்.  

ADVERTISEMENT

வீரம் மற்றும் நாட்டுப்பற்று தமிழக மக்களின் நாடி நரம்புகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மண்ணில் இருந்து நான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு நினைவஞ்சலியை காணிக்கையாக்குகின்றேன். 

இந்த கூட்டத்தை பார்க்கும் போது தமிழ்நாடு மாற்றத்துக்கு தயாராகிவிட்டது என்ற செய்தியை இந்தியாவுக்கு அளிக்கிறது. தமிழ்நாடு இப்போது திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட துடிக்கிறது.  தமிழ்நாடு இப்போது பாஜக – என்டிஏ ஆட்சியை விரும்புகிறது.  இந்த மேடையை பாருங்கள், என்.டி.ஏ கூட்டணியின் மூத்த தலைவர்கள் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியிருக்கிறார்கள். 

ADVERTISEMENT

தமிழ்நாட்டை திமுகவிடமிருந்து விடுவிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு உறுதிபாட்டோடு இங்கு கூடியிருக்கிறார்கள்.  திமுக அரசின் முடிவுரைக்கான  கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது. 

திமுக ஆட்சியமைக்க நீங்கள் வாக்களித்தீர்கள். அவர்களும் வாக்குறுதிகளை அள்ளி தெளித்தார்கள். ஆனால் செயல்பாடு என்பது பூஜ்ஜியமாக இருக்கிறது. இந்த அரசை cmc அரசு என்று கூறுகிறார்கள். அதாவது கரெப்ஷன், மாஃபியா மற்றும் கிரைம்.  ஊழல், குற்றவாளி குழுக்கள், குற்றங்களை ஆதரிக்கும் அரசுதான் திமுக அரசு. இவர்களை வேரோடு கிள்ளி எறிய வேண்டும் என்று மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.  

தற்போது பாஜக – என்.டி.ஏ வின் இரட்டை இஞ்ஜின் அரசாங்கம் அமைவது உறுதியாகிவிட்டது. 

இங்கே ஜனநாயகம் , நம்பகத் தன்மை இல்லை. திமுக ஒரே ஒரு குடும்பத்துக்காக இயங்கிக் கொண்டிருக்கிறது.  திமுகவில் நீங்கள் முன்னேற வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கு ஆமாம் சாமி போட வேண்டும். வம்சாவளி பாதை, ஊழல் பாதை, பெண்களை வசைப்பாடுவது, கலாச்சாரத்தை வசைப்பாடுவது என இந்த நான்கு பாதைகள் மூலம் மட்டுமே திமுகவில் இருப்பவர்களால் முன்னேற முடிகிறது. 

இதனால் வரும் பாதிப்பை தமிழ்நாடு சுமக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் இது தெரியும்.  அந்த ஊழல் பணம் யாருடைய பைகளுக்கு செல்கிறது என்பதை சிறுகுழந்தை கூட நன்றாக தெரிந்து வைத்திருக்கிறது” என்று திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.  

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share