நோய் தாக்குதலால் குறைந்த பருத்தி விளைச்சல்: விவசாயிகள் வேதனை

Published On:

| By admin

விருதுநகர் மாவட்டத்தில் நோய் தாக்குதலால் பருத்தி விளைச்சலில் மகசூல் குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, காரியாபட்டி தாலுகாவில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் இந்த ஆண்டு ஏராளமான விவசாயிகள் பருத்தியைப் பயிரிட்டுள்ளனர். பருத்தி நன்கு வளர்ந்து காய்கட்டும் நேரத்தில் நோய் தாக்கியதில் பருத்திகாய் முழுவதில் பூச்சி ஏற்பட்டு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.

ADVERTISEMENT

இந்த ஆண்டு 1 கிலோ பருத்தி ரூ.110-க்கு விற்பனையான நிலையில் உரிய மகசூல் கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஓரளவு பருத்தி விளைந்ததாலும் தற்போது பருத்தியின் விலை ரூ.70க்கு வந்துவிட்டது. இதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டமடைந்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள பருத்த்தி விவசாயிகள், “காரியாபட்டி, திருச்சுழி தாலுகாவில் சாகுபடி செய்யப்பட்ட பருத்தியில் நோய் தாக்குதல் காரணமாக மகசூல் குறைந்து விட்டது. பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு விவசாயத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று பருத்தி விவசாயம் செய்ய உகந்த நேரம், எந்த உரம், மருந்து தெளிக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

அதன்படி விவசாயிகள் தங்கள் மகசூலை பெருக்க வேளாண்மைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோல பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

**-ராஜ்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share