பெங்களுருவை சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு நாய்கள் பிடித்தமானது. ஏராளமான நாய்களை வளர்த்து வருகிறார். தன் நாய்களை கொண்டு கண்காட்சியும் நடத்துகிறார்.
இதன் மூலம் ஏராளமான வருவாய் ஈட்டுகிறார். இதனால், உலகம் முழுக்க அரிதான நாய்களை கண்டுபிடித்து அதை வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில், சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து ரூ.50 கோடி கொடுத்து வித்தியாசமான நாய் ஒன்றை வாங்கியுள்ளார். costliest wolfdog for Rs 50 crore
இந்த நாய் காட்டு ஓநாய்க்கும் ஜார்ஜியா, ரஷ்யாவை சேர்ந்த காக்காசியன் இன நாய்க்கும் பிறந்தது. இந்த நாயின் பெயர் காடாபாம் ஒக்காமி என்பதாகும். உலகில் அரிய வகை நாய் இதுவாகும். தற்போது, 8 மாதமேயான காடாபாம் ஒக்காமி 75 கிலோ உடை கொண்டுள்ளது. இரண்டு அடி உயரம் கொண்டுள்ளது. ஓநாய் போலவே காட்சியளிக்கிறது.
இது குறித்து சதீஷ் கூறுகையில், “என்னிடத்திலுள்ள நாய்கள் எல்லாமே அரிதானவை. அந்த வகையில், காடாபாம் ஒக்காமியை 50 கோடி கொடுத்து வாங்கினேன். வித்தியாசமான நாய் ரகங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதுதான் எனது நோக்கம். costliest wolfdog for Rs 50 crore
எனக்கும் என் நாய்களுக்கும் இங்கு அபரிதமான வரவேற்பு உள்ளது. எனது நாய்களுடன் செல்பி எடுத்துக் கொள்ள சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை ஆசைப்படுவார்கள். நானும் எனது நாய்களும் செலிபிரிட்டிகள் போலத்தான்” என்று கூறுகிறார்.