திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் நாளை (ஏப்ரல் 14) வெளியிடப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் ரஃபேல் கடிகாரத்தின் விலை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். ரஃபேல் கடிகாரத்தின் ரசீது எங்கே என்றும் திமுகவினர் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், ஏப்ரல் 14 அன்று என் வாட்ச் பில்லோடு ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.
திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் பென் டிரைவ் மூலம் பத்திரிகைகள், ஊடகங்களுக்கு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தசூழலில் இன்று (ஏப்ரல் 13) காலை அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் DMK FILES என்ற கேப்ஷனுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
நாளை காலை 10.15 மணிக்கு ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DMKFiles என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
அண்ணாமலையின் ட்விட்டர் பதிவை ஷேர் செய்துள்ள காயத்ரி ரகுராம், திமுக அமைச்சர்களின் சொத்து ஊழல் பட்டியல் என்று அண்ணாமலை கூறினார். ஆனால் தற்போது திமுக பதவியோ, எம்எல்ஏவோ, அமைச்சரோ கூட இல்லாத குடும்பத்தை குறிவைத்து திமுக கோப்புகளாக (DMK Files) மாறியுள்ளது.
இது ரொம்ப பழைய கோப்புகளா? அரசியலில் இல்லாத அண்ணாமலையின் குடும்ப உறவினரை திமுக குறிவைத்தால்…” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியா










