தமிழகத்தில் மீண்டும் கொரோனா வார்டு!

Published On:

| By Kavi

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. Corona ward again in Tamil Nadu

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பரவல் எண்ணிக்கை தற்போது 4000ஆக உள்ளது தமிழகத்தில் 189 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ADVERTISEMENT

ஆனால் இது வீரியம் குறைந்த வைரஸ் தொற்று என்று மத்திய மாநில சுகாதாரத் துறை கூறுகின்றன. மாஸ்க் கட்டாயம் இல்லை என்றாலும் அணிவது நல்லது எனவும் அறிவுறுத்தியுள்ளது.

மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 8 படுக்கைகளுடன் கூடிய கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. பிபிஇ கிட், வெண்டிலேட்டர் கருவி, ஆக்சிஜன் மற்றும் தேவையான மருந்துகளுடன் இந்த வார்டு அமைக்கப்பட்டுள்ளது. Corona ward again in Tamil Nadu

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share