கொரோனா பரவல் : பிரார்த்தனை… சமூக கூட்டங்களை நிறுத்த உத்தரவு!

By Kavi

|

Published on 24 May 2025, 1:06 PM

corona virus spread

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், ஆந்திரா அரசு பொது மக்களுக்கு சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளது. corona virus spread

இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களிலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. 

ADVERTISEMENT

எனினும் இது வீரியம் குறைந்த தொற்று என்பதால் அச்சப்பட தேவையில்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. 

இந்த சூழலில் ஆந்திர பொது சுகாதாரத்துறை கடந்த மே 21 ஆம் தேதியிட்டு ஒரு  அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 

ADVERTISEMENT

அதில், பிரார்த்தனை கூட்டம், சமூக கூட்டங்கள், விருந்துகள், விழாக்கள் போன்ற மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும் நிறுத்த வேண்டும். 

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் கொரோனோ தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

ADVERTISEMENT

60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. 

தொடர்ந்து கைகளை கழுவுதல், இருமல் தும்மலின் போது கைக்குட்டையை வைத்துக்கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும். 

கூட்டம் நிறைந்த பகுதிகளிலோ, காற்றோட்டம் குறைவாக இருக்கும் பகுதிகளிலோ, மாஸ்க் அணிவது வைரஸின் பரவலை குறைக்க உதவும். 

சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சுவை மற்றும் வாசனை இழப்பு, வயிற்றுப்போக்கு என அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

மருத்துவமனைகளில் மாஸ்க், பிபிஇ கிட் ஆகியவை தயாராக இருக்க வேண்டும். ஆய்வகங்களில் 24/7 மணி நேரமும் பரிசோதனை வசதி இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel