இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 1009 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். corona spread in india
2019ல் சீனாவில் இருந்து பரவத் தொடங்கி அனைத்து நாடுகளிலும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது கொரோனா வைரஸ்.
வோர்ல்டோமீட்டர் தகவல்படி, உலகம் முழுவதும் 7,047,53,890 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 7,010,681 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் 45,035,393 பேர் பாதிக்கப்பட்டு, 5,33,570 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். அமெரிக்காவுக்கு (1,11,820,082) அதிகபடியாக இந்தியாவில் தான் அதிக பாதிப்பு பதிவானது.
இந்தநிலையில் 2022ல் இருந்து கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்த நிலையில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தரவுபடி, இந்த பரவலில் மொத்தம் 1009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக கேரளாவில் 430 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிரா 209 பேர், டெல்லி 104, குஜராத் 83, தமிழ்நாடு 69, கர்நாடகா 47 , உத்தரப் பிரதேசம் 15, ராஜஸ்தான் 13, மேற்கு வங்கம் 12, ஹரியானா, புதுச்சேரி தலா 9, ஆந்திரா 4, மத்தியப் பிரதேசம் 2, சத்தீஸ்கர், கோவா, தெலங்கானாவில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் 4 பேர், கேரளாவில் 2 பேர், கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இப்போது பரவி வரும் இந்த கொரோனா ஒமிக்ரான் வகையைச் சார்ந்த NB.1.8.1 மற்றும் LF.7 என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். NB.1.8.1 மற்றும் LF.7 இரண்டும் JN.1 மாறுபாட்டின் திரிபாகும்.
இந்த வைரஸ் பாரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு கண்காணித்து வருகிறது. இந்த பரவலை கவலைக்குரியவை என்று இதுவரை வகைப்படுத்தப்படவில்லை.
இந்த புதியவகை கொரோனா வைரஸுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதன் மூலம் தொற்று அபாயத்தை 50% ஆகவும், கடுமையான நோயை 80% ஆகவும் குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுவதாக இந்தியா டுடே ஊடகம் தெரிவித்துள்ளது.
மே 19 நிலவரப்படி இந்தியாவில் 257 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த எண்ணிக்கை, தற்போது 1009ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. corona spread in india
