பள்ளிகளுக்கு கொரோனா தொற்று கட்டுப்பாடுகள்?: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

Published On:

| By Kavi

corona pandemic Minister Anbil Mahesh explain

கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 2) பள்ளிகள் திறக்கப்பட்டன. corona pandemic Minister Anbil Mahesh explain

இதையொட்டி திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் சென்றனர்.

ADVERTISEMENT

அங்கு, 2025-26 கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடை உள்ளிட்ட 14 கல்வி உபகரணங்கள் அடங்கிய புத்தகப்பையை மாணவர்களுக்கு வழங்கி வரவேற்றனர்.

தொடர்ந்து புதிய வகுப்புகளுக்கு சென்றுள்ள மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இதன்பின் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் கொரோனா தொற்று பரவி வரும் சமயத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

இதற்கு பதிலளித்த அவர், “இதுதொடர்பாக காலையில் சுகாதாரத் துறை அமைச்சரிடம் பேசிவிட்டுதான் வந்தேன். ‘பயப்படத் தேவையில்லை. வீரியம் இல்லாத தொற்றுதான் பரவுகிறது. இயல்பான வாழ்க்கையில் இருக்கலாம். அப்படி ஏதேனும் எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என்றால் நானே தெரிவிக்கிறேன் என்று கூறினார்’ என தெரிவித்தார்.

“சுகாதாரத் துறை அறிவுறுத்தலின் பேரில் கொரோனா பாதிப்பு அதிகமாகும் பட்சத்தில் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். தற்போது. பள்ளிகளுக்கு எந்த ஒரு கட்டுப்பாடும், வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்படவில்லை” என்று கூறினார்.

முன்னதாக மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும் அதை அணிந்துகொள்வது நல்லது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் எண்ணிக்கை 4000த்தை தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. corona pandemic Minister Anbil Mahesh explain

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share