4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு : தமிழகத்தின் நிலை?

Published On:

| By Kavi

corona Cases cross 4,000 in india

இந்தியாவில் கொரோனா தொற்று 4 ஆயிரத்தை கடந்துள்ளது. corona Cases cross 4,000 in india

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் 3,961 பேருக்கு தொற்று பாதித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

ஓமிக்ரானின் துணை வகைகளான LF.7, XFG, JN.1 மற்றும் NB. 1.8.1 ஆகிய திரிபுகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

தற்போது 4026 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் புதிதாக 171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1416ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

டெல்லியில் 393 பேரும், மகாராஷ்டிராவில் புதிதாக 69 பேருக்கு உட்பட 494 பேரும், மேற்கு வங்கத்தில் 372 பேரும், தமிழகத்தில் 215 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று 69 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். அவர் நீரிழிவு மற்றும் பார்கின்சன் ஆகிய இணை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று சுகாதாரத் துறை கூறியுள்ளது. corona Cases cross 4,000 in india

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share