கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி : முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

Cooperative crop loan waiver

கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க ரூ.17,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவித்தார். Cooperative crop loan waiver

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 15) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதில் கூட்டுறவு கடன் தொடர்பான அறிவிப்பில்,

“கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க ரூ.17,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

உழவர்களின் குறுகியகாலக் கடன் தேவைகளுக்கு ரூ.3,000 கோடி மூலதனக் கடன்.

வேளாண் நிலமற்ற பட்டியல் இனத்தவருக்கு வெள்ளாடு/செம்மறி ஆடுகள் வாங்க மத்திய காலக் கடன்கள் மற்றும் மூலதனக் கடன்.

ADVERTISEMENT

பயிர்க்கடன் வட்டி மானியத்திற்கு ரூ.853 கோடி ஒதுக்கீடு. 

பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததற்கு தவணைத்தொகை வழங்க ரூ. 1,477 நிதி ஒதுக்கீடு. 

நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்கிட ரூ.525 கோடி ஒதுக்கீடு. 

டெல்டா மாவட்டங்களில் 22 நெல் சேமிப்பு வளாகங்கள், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 6 நெல் சேமிப்பு வளாகங்கள், 25,000 இரும்பு இடைச்செருகுக் கட்டைகள், 2,500 டிஜிட்டல் ஈரப்பத கருவிகள், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒரு டிராக்டருடன் கூடிய நெல் உலர்த்தும் இயந்திரம் ஆகியன செயல்படுத்திட ரூ. 480 கோடி ஒதுக்கீடு.

உணவு மானியத்திற்கு ரூ.12,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share