குன்னூரில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 9-ஆக அதிகரித்துள்ளது.
விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து 59 பயணிகளுடன் நேற்று காலை ஊட்டிக்கு சுற்றுலா பேருந்து ஒன்று வந்துள்ளது. ஊட்டியை சுற்றி பார்த்துவிட்டு மாலை கோவைக்கு திரும்பியுள்ளனர்.
பேருந்தானது மாலை 5.30 மணியளவில் குன்னூர் – மேட்டுப்பாளையம் 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி 50 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினர்.விபத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பேருந்து விபத்தில் முப்புடாதி (67), முருகேசன் (65), இளங்கோ (64), தேவிகலா (42), கெளசல்யா (29), நிதின் (15), தங்கம் (40), ஜெயா (50) ஆகிய 8 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்த 40 பேர் மீட்கப்பட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குன்னூர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்தநிலையில் குன்னூர் விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் பேருந்துக்கு அடியில் சிக்கியிருந்த பாண்டித்தாய் என்பவர் சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ஒன்பது மாதங்களில் 146 புலிகள் பலி: காரணம் என்ன?
Thalaivar 170 Squad : செம அப்டேட்டை வெளியிட்ட லைக்கா..!
இறையாண்மையைக் காக்கவே போரிடுகிறோம்: புதினின் புதிய ஸ்டேட்மென்ட்!