ரஜினியுடன் மோதும் ஹிருத்திக் ரோஷன் : ஆயிரம் கோடி வசூல் சாத்தியமா?

Published On:

| By christopher

coolie vs war 2 : who will win at box office?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது கூலி. coolie vs war 2 : who will win at box office?

இப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா, நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், சுதந்திர தின விடுமுறையை குறி வைத்து வரும் ஆகஸ்ட் 14- ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இந்நிலையில், ரஜினியின் கூலி படத்திற்கு போட்டியாக ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வார் படத்தின் 2ஆம் பாகம் அதே நாளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் அயான் முகர்ஜி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், அனில் கபூர், கியாரா அத்வானி ஆகியோர் வார் 2 படத்தில் நடித்துள்ளனர்.

யாருக்கு? எங்கு வெற்றி? coolie vs war 2 : who will win at box office?

இரண்டு படங்களும் மிகப்பெரிய வசூலை குறிவைத்து களமிறங்கும் நிலையில், இந்தியாவில் எந்தெந்த இடங்களில் யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பதை இங்கு பார்க்கலாம்.

வர்த்தக நிபுணர்களின் கணிப்பின் படி, ’கூலி அசல் தமிழ் படம் என்பதால், தென் தமிழ்நாட்டிலும் War 2 ஐ தோற்கடிக்கும், அதே நேரத்தில் War 2 அசல் இந்தி படம் என்பதால் வட இந்தியாவில் War 2 முன்னணி வகிக்கும்.

கூலியில் பாலிவுட் உச்சநட்சத்திரமான அமீர் கான் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்துள்ளதால், படத்தில் அவரது கதாப்பாத்திரம் கிளிக் ஆனால், வட இந்திய மார்க்கெட்டிலும் Coolie நல்ல வசூலைப் பெறும்.

மேலும் நாகார்ஜுனா மூலம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும், சௌபின் ஷாஹிர் மூலம் கேரளா, உபேந்திரா மூலம் கர்நாடகாவிலும் கூலி வசூல் வேட்டை நடத்த வாய்ப்புள்ளது.

அதே வேளையில் தெலுங்கு திரையுலகின் உச்சநட்சத்திரமான ஜூனியர் NTR வார் 2 படத்தில் நடிப்பதால் அப்படம் தெலுங்கு மாநிலங்களில் கடுமையான போட்டியைக் கொடுக்கும்.

வெளிநாட்டு மார்க்கெட்டை பொறுத்தவரை வார் 2-வின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதே வேளையில், கூலியும் கடுமையான போட்டியைக் கொடுக்கும்.

இரண்டு படங்களின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஒப்பிடுகையில், ஒட்டுமொத்தமாக வார் 2-க்கு கூலியை விட அதிக ஓப்பனிங் கிடைக்கும். எனினும் கடும் மோதல் காரணமாக இரண்டு படங்களின் ‘ஆயிரம் கோடி’ வசூல் இலக்கில் பாதிப்பு ஏற்படும்‘ எனக் கணித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share