”தலைவருடன் நடிக்க காத்திருக்கிறேன்” : நாகார்ஜூனா ஹேப்பி!

Published On:

| By christopher

Coolie Update : Nagarjuna thanks Lokesh

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ கூலி ‘ திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் பரபரப்பான இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ கூலி ‘ திரைப்படத்தின் அறிவிப்பு டீசர் வெளியானது தொட்டே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது.

ADVERTISEMENT

படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், நேற்று ( ஆகஸ்ட் 28) முதல் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்.

அதன்படி, ஏற்கனவே இந்தப் படத்தில் மலையாள நடிகர் சௌபின் சாஹர் ‘ தயாள் ‘ என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என நேற்று அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா ‘சைமன்’ என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

King Nagarjuna in #coolie is official now???? #rajinikanth #nagarjuna #lokeshkanagaraj #anirudh - YouTube

ADVERTISEMENT

பான் இந்திய திரைப்படமாக உருவாகுமிந்தப் படத்தில் அடுத்து எந்த மாநிலத்தை சேர்ந்த நடிகர் இடம்பெறப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து நடிகர் நாகர்ஜூனா தனது மகிழ்ச்சியை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர், “கைதி’ படத்தில் இருந்தே உங்களுடன் பணியாற்ற வேண்டும் என காத்திருந்தேன். கூலி படத்தில் என்னை இணைத்ததற்கு நன்றி லோகி. புதிய படத்தில் ஒன்றாக இணைந்து பயணிக்க ஆர்வமாக உள்ளது. தலைவருடன் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– ஷா

பேராசிரியர்கள் முறைகேடு ஆட்சி திறனின்மையை காட்டுகிறது : சீமான் குற்றச்சாட்டு!

‘வேட்டையன் ‘ : டப்பிங்கை தொடங்கிய மஞ்சு வாரியர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share