ரஜினியின் கூலி பட ’சூப்பர்’ அப்டேட் வெளியானது!

Published On:

| By christopher

coolie chikitu music video release at june 25

‘கூலி’ படத்தின் Chikitu பாடல் வரும் 25ம் தேதி வெளியாகிறது என ப்ரோமோவை வெளியிட்டு படக்குழு இன்று (ஜூன் 23) அறிவித்துள்ளது. coolie chikitu music video release at june 25

பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் கூலி. அவருடன் நாகார்ஜுனா, அமீர் கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் மிகப்பெரிய பான் இந்தியா நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது.

ADVERTISEMENT

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே வெறும் 0.56 நொடிகள் மட்டுமே வெளியான படத்தின் முதல் பாடலான ‘சிக்கிட்டு வைப்’ (chikittu vibe) ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது சிக்குட்டு வைப் பாடலின் முழு வீடியோ வரும் ஜூன் 25ஆம் தேதி மாலை வெளியாகும் என இன்று ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர் தற்போது அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதில் சாண்டி – அனிருத் இடையே கலாட்டாவான உரையாடலை மையமாக வைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Chikitu Music Video - Promo | COOLIE | Superstar Rajinikanth | Sun Pictures | Lokesh | Anirudh


ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share