பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று( அக். 6) தொடங்கப்பட்டது. புதிய தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி களமிறங்கியுள்ளார். பல்வேறு புதிய போட்டியாளர்கள், புதிய விதிமுறைகள் எனப் பலத் திருப்பங்கள் நிறைந்த பிக் பாஸ் சீசனாக தொடங்கியுள்ளது இந்த சீசன் 8.
இது ஒரு பக்கம் இருக்க, இந்தி பிக் பாஸ் சீசன் 18 நேற்றே தொடங்கப்பட்டது. கடந்த 17 சீசன்களாக இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். இதில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ யில் பங்கேற்றவரும் நடிகையுமான சுருதிகா போட்டியாளராக களமிறங்கிறார்.
தமிழ் பிக் பாஸில் ஏற்கனவே இதே ‘குக் வித் கேமாளி’ நிகழ்ச்சியைச் சேர்ந்த தர்ஷா குப்தா, சுனிதா, விஜே விஷால் ஆகியோர் பங்கேற்றுள்ள நிலையில், தற்போது இந்தி பிக் பாஸில் அதே ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியைச் சேர்ந்த சுருதிகா பங்கேற்கிறார்.
இவர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஸ்ரீ’ என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது இந்தி பிக் பாஸில் கலந்து கொண்டதன் மூலம், இந்தி பிக் பாஸில் பங்கேற்கும் முதல் தமிழ் பெண் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார் சுருதிகா.
இதற்கு முன்பு நடன இயக்குநர் பாபா பாஸ்கர், கிரண், பிந்து மாதவி உள்ளிட்ட தமிழ் திரை நட்சத்திரங்கள் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக் பாஸில் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹரியானா, ஜம்மு – காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை : ‘கை’ ஓங்கும் காங்கிரஸ்!
விமான நிகழ்ச்சியில் உயிரிழப்பு… அறிக்கை அளிக்க டிஜிபிக்கு உத்தரவு!
பிக் பாஸ் வீட்டில் கழுதை… போட்டியாளர்களுடன் தங்க ஏற்பாடு!
’மகாராஜா ‘ நிதிலனுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு!
கிறுக்கு பிடித்த ட்ரோலர்ஸ் … தலையை பிய்த்துக் கொள்ளும் பிரியா மணி