திருமணமா?: பதில் அளித்த ரித்திகா

Published On:

| By admin

’குக் வித் கோமாளி’ புகழ் ரித்திகா தனது திருமணம் குறித்தான கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாக்கியலட்சுமி’ சீரியலில் அமிர்தா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் ரித்திகா. இவர் விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ சீசன் இரண்டில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் உள்ளே வந்தார். இந்த நிகழ்ச்சி இவரை மேலும் பிரபலமாக்கியது.

ADVERTISEMENT

இப்போது இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர், ‘தற்போது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நடந்து வருகிறது. சீசன் 2 VS சீசன்3 என எப்போது எதிர்ப்பார்க்கலாம்? நீங்கள் எப்போது வருவீர்கள்?’ என கேட்டுள்ளார். அதற்கு, ‘நானும் அதற்காக தான் காத்திருக்கிறேன். எப்போது என தெரியவில்லை. பெரும்பாலும் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கும் போது தான் அது போன்று நடக்கும். அதனால், சீக்கிரமே வருவேன் என நினைக்கிறேன்’ என பதிலளித்துள்ளார்.

அதே போல, திருமணம் குறித்தான கேள்விக்கு ‘எல்லாம் தலை விதிப்படி தான் நடக்கும்’ எனவும் ரித்திகா கூறியுள்ளார்.

ADVERTISEMENT

**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share