‘குக் வித் கோமாளி’க்கு குட்பை சொன்ன இயக்குநர்… நிகழ்ச்சி முடிவுக்கு வருகிறதா?

Published On:

| By Manjula

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குநரும் தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக அறிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளிக்கு என, அனைத்து தரப்பிலும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை நான்கு சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 5-வது சீசன் எப்போது தொடங்கும்? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ADVERTISEMENT

இதற்கிடையில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்த செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் சமீபத்தில் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். தொடர்ந்து தயாரிப்பாளர் ரவூஃபாவும் விலகினார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் இயக்குநர் பார்த்திபனும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”சில குட்பை சொல்வது ரொம்பவே கடினம், ஆனால் அதே நேரத்தில் மகிழ்ச்சியான நினைவுகளுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறேன்.

ADVERTISEMENT

இது எங்களுக்கு நிகழ்ச்சி மட்டுமல்ல, நான்கு சீசன்களும் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக பயணித்த நினைவுகள் எனது நெஞ்சில் எப்போதும் இருக்கும். உங்கள் அனைவரின் அன்பு, ஆசிர்வாதத்திற்கு மிகவும் நன்றி.

என்றைக்கும் உங்கள் நன்றி உடையவனாக இருப்பேன். எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி”, என்று மிகவும் உருக்கத்துடன் கூறியுள்ளார். அவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், ”இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவ்வளவு தானா?” என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உங்கள் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து போடவில்லையா?

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக உதவவில்லை: மோடி குற்றச்சாட்டு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share