கதாநாயகனாக அறிமுகமாகும் ரக்‌ஷன்- பிக்பாஸ் வாய்ப்பு என்ன ஆனது?

Published On:

| By Kavi

விஜே ரக்‌ஷன் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் விஜே ரக்‌ஷன். இவரது நகைச்சுவை பேச்சுக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் முறைக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ADVERTISEMENT

இவர் துல்கர் சல்மானுடன் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் நடித்தார். இந்நிலையில், யோகேந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகிறார். காதல், நட்பு, உறவுகள் என கமர்ஷியலாக படம் உருவாக இருக்கிறது என படக்குழு தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

படத்தில் ‘கலக்க போவது யாரு’ தீனா, விஷாகா திமான், பிராங்க்ஸ்டர் ராகுல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மலையாள பிரபல இசையமைப்பாளரான சச்சின் வாரியர் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்க இருக்கிறது. 

‘குக் வித் கோமாளி’ மூன்றாவது சீசனுக்கான படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்த நிலையில் அக்டோபரில் பிக்பாஸ் ஆறாவது சீசன் தொடங்க இருக்கிறது. இதற்கு முந்தைய சீசன்களிலேயே ரக்‌ஷன் பங்கேற்க பேச்சுவார்த்தை நடந்து, அது நடக்காமல் போனது. இந்த ஆறாவது சீசனில் அவர் நிச்சயம் கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ரக்‌ஷன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

ADVERTISEMENT

ஆதிரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share