CWC 5: நிகழ்ச்சியில் களமிறங்கும் ‘வேற லெவல்’ போட்டியாளர்கள்!

Published On:

| By Manjula

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் களமிறங்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளன.

விஜய் தொலைக்காட்சியை பொறுத்தவரை பல்வேறு ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வந்தாலும் கூட, அந்த தொலைக்காட்சியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்றே ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

Manjummel Boys: செய்த சம்பவம்… புதிய வரலாறு படைத்தது!

குக்குகளும், அவருக்கு துணையாக கோமாளிகளும் சேர்ந்து சமையல் செய்யும் போது அடிக்கும் லூட்டிகள் தான் இந்த நிகழ்ச்சியின் பிரதானம். காமெடி தான் பிரதானம் என்பதால் சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை இதற்கு பெருவாரியாக ஆதரவளித்து வருகின்றனர்.

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் அடுத்த சீசன் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் இந்த வருடம் அப்படி இல்லாமல் அதிக இடைவெளி கொடுத்தே 5-வது சீசன் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.

Kanguva Teaser: ‘வெறித்தனம்’ காட்டும் சூர்யா… ‘சும்மா தெறிக்குது’ கொண்டாடும் ரசிகர்கள்!

வெங்கடேஷ் பட் தொடங்கி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குநர் என ஒவ்வொருவராக விலகியது தான் இதற்கு காரணம். கடந்த சீசன்களில் நடுவர்களாக வெங்கடேஷ் பட், தாமு இருவரும் இருந்தனர்.

தற்போது வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து மொத்தமாக விலகிவிட்டார். இதையடுத்து நடிகரும், பிரபல சமையற்கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது புதிய செப் ஆக இணைந்துள்ளார்.

இவரின் வருகையை பிரமாண்டமாக ஷூட் செய்து அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை இருவரும் தொகுத்து வழங்க இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

 

அதன்படி நடிகை அம்பிகா, நடிகர் விடிவி கணேஷ், யூடியூபர் இர்ஃபான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சின்னத்திரை நடிகர் வசந்த், தொகுப்பாளர் திவ்யா துரைசாமி, பிக்பாஸ் போட்டியாளர்கள் தினேஷ் மற்றும் பூர்ணிமா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருக்கின்றனராம்.

இவர்களோடு பாண்டிச்சேரியில் இயற்கை விவசாயம் செய்துவரும் பிரெஞ்சுக்காரர் மெக்கன்சியும் கலந்து கொள்ளலாம் என தெரிகிறது.

விரைவில் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பினை சேனல் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜாபர் சாதிக்கிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

சிஏஏ சட்டம்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

அண்ணாமலைக்கு எதிராக போட்டியா? பெண் தொழிலதிபர் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share