கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடும் பட்சத்தில்… அவரை எதிர்த்து திமுக யாரை நிறுத்தப் போகிறது என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எதிரொலித்து வருகிறது.
இதுகுறித்து இன்று (மார்ச் 19) மின்னம்பலத்தில், ‘அண்ணாமலைக்கு எதிராக பெண் தொழிலதிபர்… ஸ்டாலின் போடும் திட்டம்’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், “பாஜக, அதிமுக இரு கட்சிகளும் கவுண்டர் சமுதாய வேட்பாளர்களை நிறுத்தினால், திமுக கோவையில் அடர்த்தியாக இருக்கும் நாயுடு சமுதாய வேட்பாளரை நிறுத்தத் திட்டமிடுகிறது.
அந்த வகையில் தொழிலதிபர் நந்தினி ரங்கசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் ஆகியோரது பெயர்கள் பரிசீலனைப் பட்டியலில் இருக்கின்றன” என்று குறிப்பிட்டிருந்தோம்.
நமது செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே கோயம்புத்தூர் ஜிஆர்ஜி நிறுவனங்கள், மற்றும் சந்திரா டெக்ஸ்டைல்ஸ் ஆகியவற்றின் தலைவரும், கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியின் செயலாளராகவும் இருக்கும் நந்தினி ரங்கசாமி தரப்பினர் நம்மிடம் பேசினார்கள்.
“உங்கள் செய்தியை பார்த்துவிட்டு பல தரப்பினரும் எங்களைத் தொடர்புகொண்டு கேட்டு வருகிறார்கள். மேடத்துக்கு அப்படி ஒரு எண்ணமோ விருப்பமோ இல்லை. அது ஒரு தவறான செய்தி” என்று அவர்கள் தெரிவித்தார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்: தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் புகார்!
டெல்லி மதுபான வழக்கில் கவிதாவுக்கு தொடர்பா? – ஆம் ஆத்மி விளக்கம்!
Comments are closed.