நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… அன்சுல் மிஸ்ரா ஐஏஎஸ் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு!

Published On:

| By Selvam

contempt plea Madras High Court suspends

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சிஎம்டிஏ-வின் முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 12) நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. contempt plea Madras High Court suspends

சென்னை நெசப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக, லலிதாம்பாள் மற்றும் அவரது சகோதரர் விஸ்வானந்தன் ஆகியோருக்கு சொந்தமான 17 சென்ட் நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1983-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது.

ஆனால், அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படாததால், பயன்படுத்தப்படாமல் உள்ள தங்கள் நிலத்தை திரும்ப தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 2003-ஆம் ஆண்டு லலிதாம்பாள், விஸ்வானந்தன் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரர்களுடைய கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, மனுதாரர்களிடம் 10.5 சென்ட் நிலம் திருப்பி அளிக்கப்பட்டது. ஆனால், சாலை விரிவாக்கத்திற்காக 6.5 சென்ட் நிலம் தேவைப்படுவதாக கூறி, வீட்டு வசதி வாரியம் தன் வசம் வைத்துக்கொண்டது.

இந்த நிலமும் உரிய காலத்தில் பயன்படுத்தப்படாததால், அந்த நிலத்தையும் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று மனுதாரர்கள் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரித்து இரண்டு மாதங்களில் இந்த பிரச்சனைக்கு சட்டப்படி தீர்வு காண வேண்டும் என்று அப்போதைய சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், இந்த உத்தரவை அன்சுல் மிஸ்ரா பின்பற்றவில்லை என்று அவருக்கு எதிராக 2024-ஆம் ஆண்டு மனுதாரர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, 30 நாட்களுக்கு தண்டனையானது நிறுத்திவைக்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் இருவருக்கும் ரூ.25,000 இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இந்த தொகையை அன்சுல் மிஸ்ராவின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அன்சுல் மிஸ்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், லக்‌ஷ்மி நாராயணன் அமர்வு ஒரு மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட இருவருக்கும் மூன்று வாரங்களுக்குள் ரூ.25,000 இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். contempt plea Madras High Court suspends

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share