தரமற்ற உணவு : சொமேட்டோவுக்கு அபராதம்!

Published On:

| By Kavi

தரக்குறைவான உணவை விநியோகித்த உணவகத்துக்கும் சொமேட்டோ நிறுவனத்துக்கும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. consumer court order to fine zomato

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெகபிரபு நாராயணசாமி. இவர் வேளச்சேரியில் உள்ள அர்ஜுன் மம்மி டாடி ஆந்திரா மெஸ் என்ற உணவகத்தில் நான் வெஜ் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து வாந்தி, மயக்கம், நெஞ்சு வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இரண்டு நாள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அவர், இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையில் புகாரளித்தார்.

இதனால், அந்த உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதில் அங்கு சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவது தெரியவந்தது. அந்த உணவகத்துக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 2000 ரூபாய் அபராதம் விதித்தனார்.

இந்த சூழலில் ஜெகபிரபு தனக்கு 2.5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று (மே 26) விசாரித்த நுகர்வோர் குறைக்கிற ஆணையம், “தரக்குறைவாக சேவை குறைபாட்டுடன் செயல்பட்ட உணவகம் மற்றும் சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம் இணைந்து பாதிக்கப்பட்ட ஜெகபிரபுவுக்கு இழப்பீடாக 25 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவாக 5000 ரூபாயும் வழங்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தது

மொத்தமாக 30 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. consumer court order to fine zomato

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share