விஜயவாடாவில் வேலு…. பெங்களூருவில் பொன்முடி!

Published On:

| By Aara

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் வருகிற மார்ச் 22 ஆம் தேதி கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை நடத்துவது என முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. Constituency Realignment Issue

இதன்படி நேற்று மார்ச் 11-ம் தேதி ஒடிசாவுக்கு சென்ற தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, தயாநிதி மாறன் எம்பி ஆகியோர் அம்மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து இன்று (மார்ச் 12) இதே பணிக்காக கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு திமுக அமைச்சர்கள் சென்றிருக்கிறார்கள். Constituency Realignment Issue

தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் வனத்துறை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று மதியம் 12.30 மணிக்கு பெங்களூரில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோரை சந்திக்கின்றனர்.

மேலும், ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள கட்சிகளை அழைப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் ஆகியோர் இன்று விஜயவாடா சென்றுள்ளனர்.

அடுத்தடுத்த நாட்களில் மேற்கு வங்காள மாநிலத்துக்கு திமுக துணை பொது செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share