இடைத்தேர்தலை சந்தித்த விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.
மக்களவைத் தேர்தலோடு, தமிழ்நாட்டில் விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி பாஜகவுக்கு தாவியதால் தேர்தல் நடத்தப்பட்டது.
இத்தொகுதியில் தாரகை கத்பர்ட்(காங்கிரஸ் ), நந்தினி (பாஜக), ராணி (அதிமுக) மற்றும் ஜெமினி (நாதக) ஆகியோர் போட்டியிட்டனர்.
இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பர்ட் முன்னிலை வகித்து வருகிறார்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை 29072 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் நந்தினியை காட்டிலும் 16622 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
இதனால் விளவங்கோட்டில் காங்கிரஸ் வெற்றி உறுதியாகியுள்ளது. இதன்மூலம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியை தக்கவைத்துக் கொள்கிறது காங்கிரஸ்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்பு தேதி அறிவிப்பு!
தூத்துக்குடி : மீண்டும் எம்.பி.ஆகிறார் கனிமொழி