வயநாடு மக்களுக்காக 100 வீடுகளை கட்டித்தருவோம் : ராகுல் உறுதி!

Published On:

| By Minnambalam Login1

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டு மக்களைப் பார்க்கச் சென்ற ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்குக் காங்கிரஸ் நூறு வீடுகள் கட்டித்தரும் என்று உறுதியளித்தார். wayanad landslide rahulgandhi

கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி அதிகாலையில், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பலத்த மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. dslide r

இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 300க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என மீட்பு குழுக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் சொந்தங்களை இழந்து தவிக்கும் வயநாடு மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் வயநாடு எம்.பி.யுமான  ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கட்சி உறுப்பினர்களுடன் வயநாடு சென்றனர்.

நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த சூரல்மலைக்கு சென்ற ராகுல் காந்தி நிவாரண முகாமில் தங்கியிருந்தவர்களையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இரண்டாவது நாளாக இன்று(ஆகஸ்ட் 2) மேப்பாடி சென்ற ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும்  அங்கு சமூதாய நலக் கூடத்தில் தங்க வைத்திருந்தவர்களை சந்தித்து பேசினர்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த  ராகுல் காந்தி,  “எனது அப்பாவை இழந்தபோது தான் உணர்ந்த உணர்வை இப்போது  உணர்கிறேன். நான் அப்பாவை மட்டும்தான் இழந்தேன். ஆனால் இங்குப் பலர் தங்கள் குடும்பங்களையே இழந்து நிற்கிறார்கள்” என்று வேதனை தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குக் காங்கிரஸ் குடும்பம் நூறு வீடுகள் கட்டித்தரும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் அதே இடத்திற்குப் போக விரும்பவில்லை என்று அவரிடம் தெரிவித்ததாகவும், அவர்களுக்கு மாற்று இடங்களை ஏற்பாடு செய்து தரக் கேரள அரசிடம் வலியுறுத்த உள்ளதாகவும்  குறிப்பிட்டார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

“மதுரை எய்ம்ஸ் தாமதத்தை ஒப்புக்கொள்கிறோம்” : ஆ.ராசாவுக்கு நட்டா பதில்!

மூணு வருஷமா சம்பளம் வரல…. மனு பாக்கர் கோச்சின் மறுபக்கம்!

தமிழகத்தில் மிதமான மழை… வானிலை மையம் அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share