234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெற தொடங்கிய காங்கிரஸ்.. கட்டணமே இல்லை!

Published On:

| By Mathi

TNCC Election 2026

2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் 234 தொகுதிகளுக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டி விருப்ப மனுக்களை இன்று முதல் பெற்று வருகிறது.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிவிப்பில், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கட்டணமில்லா விருப்ப மனு இன்று முதல் (10.12.2025) வருகிற 15.12.2025 வரை பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனு படிவங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலோ அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டியிலோ சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் தற்போது டிசம்பர் 31, 2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு படிவங்கள் வழங்கும் பணி இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொடங்கியது. இதனை செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share