ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: விஜய்யை சந்தித்த காங்கிரஸ் பிரவீன்.. திமுக ‘அப்செட்’- ராகுல் ‘ஷாக்’!

Published On:

| By Kavi

வைஃபை ஆன் செய்ததும்,’டிட்வா புயலை விட நம்ம அரசியல் ரொம்பவே போக்கு காட்டுதே’ என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

டிட்வா ஜூரம் போகலையா? இல்லை அரசியல் ஆட்டம் அப்படியா?

ADVERTISEMENT

நம்ம ஸ்டேட் பாலிட்டிக்ஸ் அப்படிதான் இருக்குய்யா.. காங்கிரஸ் தலைமை ’அதிகாரப்பூர்வமாக’ அறிவித்த ஐவர் குழு சிஎம் ஸ்டாலினை ‘அதிகாரப்பூர்வமாக’ சந்திச்சது..

”திமுக கூட்டணியிலதான் காங்கிரஸ் நீடிக்குது.. காங்கிரஸ் கட்சி வடக்கா? தெற்கா? கிழக்கா? மேற்கா? என்ற (கூட்டணி) சந்தேகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைச்சுட்டோம்”னு செல்வப்பெருந்தகையும் பிரஸ்மீட்டுல சொல்லி இருந்தாரு..

ADVERTISEMENT

சிஎம் ஸ்டாலினுடன் ஐவர் குழுவின் தலைவரான ராகுலின் ’தூதர்’ கிரிஷ் சோடங்கர் பேசுனது பத்தியும் 70 சீட் பிளஸ் கூட்டணி ஆட்சின்னு டிமாண்ட் வைச்சது பத்தியும் நாமதான் டிஜிட்டல் திண்ணையில் முதல்ல பதிவு செஞ்சோம்… அந்த ‘நெருப்பு’ அடங்குவதற்குள் ’இன்னொரு’ சந்திப்பு.. ’ இன்னொரு ‘ திசையில்..

ஓஹோ.. விஜய்யை காங்கிரஸ் பிரமுகர் சந்திச்சதா?

ADVERTISEMENT

ஆமா.. விஜய்யை பட்டினப்பாக்கம் ஆபீஸில் காங்கிரஸின் ஆராய்ச்சி பிரிவு தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி சந்திச்சு பேசியிருக்காரு.. அதான் இப்ப களத்துல ”பத்திகிட்டு எரியுது”..

யாருய்யா இந்த பிரவீன் சக்கரவர்த்தி?

பிரவீன் சக்கரவர்த்தி குறித்து சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்களில் விசாரிச்சப்ப ஏகப்பட்ட தகவல்களை சொல்றாங்கப்பா.. “நிதி அமைச்சராக பிடிஆர் இருந்தப்ப ரூ30,000 கோடி பத்தி பேசுன ஆடியோ ஒன்னு வெளியே வந்து பெரும் சர்ச்சையானதே.. அந்த ஆடியோவை டேப் செஞ்சு ரிலீஸ் செஞ்சதே சாட்சாத் இந்த பிரவீன்தானாம்..

2024 லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில சீட் வாங்கி போட்டியிடனும்னு ரொம்பவே மல்லுக்கட்டுனாரு பிரவீன்.. ஆபீசு எல்லாம் போட்டு எலக்‌ஷன் வேலையும் ஆரம்பிச்சாரு.. ஆனால் திமுகவினரோ, இப்படி துரோகம் செஞ்ச ஒருத்தருக்கு எல்லாம் வேலை பார்க்கவே முடியாதுன்னு ரொம்பவே காட்டமாக சொல்லிட்டாங்க.. அதனாலதான் கடைசி நேரத்துல சுதாவை வேட்பாளராக அறிவிச்சாங்க..

இதனால திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தா நம்மோட அரசியல் எதிர்காலம் அவுட்னு நினைக்கிறவரு பிரவீன் சக்கரவர்த்தி..

பிரவீன் சக்கரவர்த்தி, சீனியர் லீடரான கேசி வேணுகோபாலை வெச்சுதான் விஜய் பக்கம் காங்கிரஸை நகர்த்துறாரு .. அதாவது விஜய்க்கு தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் செல்வாக்கு இருக்குதானே.. அதனால விஜய் கூட கூட்டணி வெச்சுகிட்டா இந்த 3 ஸ்டேட்லயும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும்னு சொல்றாரு பிரவீன்.. இதுல கேரளா சிஎம் கேண்டிடேட் ரேஸில இருக்கிற கேசி வேணுகோபால் ரொம்பவே கன்வீன்ஸ் ஆகிட்டாரு போல.. அதனால கேசி வேணுகோபால், பிரவீன் சக்கரவர்த்தி எல்லாம் தனியாக விஜய் கட்சி கூட்டணிக்கு ரூட் போட்டுகிட்டு இருக்காங்க.. இருந்தாலும் விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்திச்சது அப்பீசியல் இல்லவே இல்லை” என்கின்றனர்.

சரி.. விஜய்கிட்ட பிரவீன் சக்கரவர்த்தி என்ன சொன்னாராம்?

இந்த சந்திப்பை பத்தி பிரவீன் சக்கரவர்த்தியே காங்கிரஸ் பிரமுகர்கள்கிட்ட ஷேர் பண்ணியிருக்காரு.. இது பற்றி நம்மிடம் பேசிய காங்கிரஸ் சோர்ஸ்கள், “விஜய்கிட்ட பேசும் போது காங்கிரஸ் மேலிடத்துக்கும் தமக்குமான நெருக்கம் எப்படி?ன்னு சில விஷயங்களை சொல்லிட்டு, திமுகவோட கூட்டணி சரிவராது.. அதனால உங்க கூட கூட்டணி வைக்கனும்னு ராகுல் காந்தி ரொம்ப விருப்பமா இருக்கிறாரு.. காங்கிரஸும் தவெகவும் கூட்டணி வெச்சா ஆட்சி அமைச்சுடலாம்”னு சொன்னாராம்

ஓஹோ விஜய் கிட்ட இருந்து என்ன ரியாக்‌ஷனாம்?

விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் நாம் பேசுனப்ப, “பிரவீன் சக்கரவர்த்தி சொல்றதையெல்லாம் ஆர்வமாக கேட்டுகிட்டாரு தளபதி..அதே நேரத்துல அவரால பிரவீன் சொல்றதை எல்லாத்தையும் நம்ப முடியலை.. அதனால நேரடியாகவே, ‘நீங்க டெல்லி ஹை கமாண்ட் சொல்லித்தான் வந்தீங்களா?’ன்னு கேட்க பிரவீன் கொஞ்சம் ஆடிப் போனாரு.. இல்லை நானாத்தான் வந்தேன்.. ஆனால் மேலிடத்தோட விருப்பம் இதுன்னு சொல்லி சமாளிச்சாரு பிரவீன்” என்கின்றனர்.

விஜய்யை பிரவீன் சந்திச்சதுல திமுக ரியாக்‌ஷன் என்னவாம்?

“ஐவர் குழு அதிகாரப்பூர்வமாக வந்து பேசிட்டு போனதுக்கு பிறகு இப்படி குட்டையை குழப்பிவிடுற வேலையை பிரவீன் செய்யுறாரு.. சரி.. ஹை கமாண்டுக்கு தெரியாமல்தான் பிரவீன் பேசியது உண்மைன்னா அவரு மேல ராகுல் காந்தி நடவடிக்கை எடுப்பாரா? அட்லீஸ்ட் சோ காஸ் நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்பாரா?” என அறிவாலய வட்டாரங்கள் ரொம்பவே அப்செட்டாக பேசுகின்றன என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share