தவெக கூட்டணிக்கு ’இதுதான் பெயர்’.. வெளியிட்ட காங். பிரவீன் சக்கரவர்த்தி

Published On:

| By Mathi

Praveen Chakravarty TVK Alliance Name

முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைமையிலான கூட்டணியின் பெயரை அறிவித்துள்ளார் ராஜ்யசபா இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி (Praveen Chakravarty).

தமிழகத்தில் காலியாக உள்ள 1 ராஜ்யசபா இடத்துக்கான இடைத் தேர்தல் ஜூன் 18-ந் தேதி நடைபெற உள்ளது. சட்டசபையில் அதிக எம்.எல்.ஏ.க்களைப் பெற்றுள்ள ஆளும் கட்சியான தவெக, கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு 1 இடத்தையும் விட்டுக் கொடுத்துள்ளது.

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். தவெக- காங்கிரஸ் கூட்டணிக்கு உறவுப் பாலமாக இருந்தவர் என்பதால் பிரவீன் சக்கரவர்த்திக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரவீன் சக்கரவர்த்தி, “தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்

ADVERTISEMENT

என் மீது நம்பிக்கை வைத்த ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் விஜய்- க்கு மனமார்ந்த நன்றி.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share