திமுகவை மீண்டும் சீண்டிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்

Published On:

| By Mathi

Manickam Tagore

திமுக- காங்கிரஸ் இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வரும் நிலையில் திமுகவை சீண்டி, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மீண்டும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

”கூட்டணி ஆட்சி” என்ற காங்கிரஸ் கோரிக்கையை திமுக நிராகரித்துவிட்டது. இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தேக்க நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி சந்தித்து பேசியிருந்தார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, திமுக -காங்கிரஸ் பேச்சுவார்த்தை ‘நல்லா போய்க் கொண்டிருக்கிறது’ என கூறியிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிய திமுகவின் தளபதி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

”கூட்டணி ஆட்சி” கோரும் காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்து தளபதி எம்.எல்.ஏ. பேசியதற்கு திமுகவினர் பெரும் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து கூட்டணி குறித்து பொதுவெளியில் திமுகவினர் பேசக் கூடாது என கட்சித் தலைமை அறிவுறுத்தல் விடுத்திருந்தது. இதனால் திமுகவினர் அமைதி காத்து வரும் நிலையில் மாணிக்கம் தாகூர் மீண்டும் திமுகவுக்கு எதிராக பதிவிட்டிருக்கிறார்..

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share