நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் நியாய யாத்திரையை மணிப்பூரில் தொடங்கி மும்பை வரை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது ராகுலின் யாத்திரை ஜார்க்கண்டில் நடைபெற்று வருகிறது. முன்னதாக ராகுல் காந்தி ஜார்கண்டில் நுழைந்த போது, புதிய முதல்வர் சம்பாய் சோரனுடன் நடைப்பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று (பிப்ரவ்ரி 3) ராகுல் பாபா பைத்யநாத் தாம் கோயிலில் பூஜைகள் செய்து வழிபாடு செய்தார்.
நெற்றி நிறைய பட்டை போட்டு, பிங்க் நிற ஆடையில் ராகுல் வழிப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதனை பகிரும் நெட்டிசன்கள் ராகுலா இது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாபா பைத்யநாத் தாம் என்பது ஜார்கண்ட் மாநிலம் தியோகர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். பழைமையான வரலாறு, புராணங்கள் மற்றும் இதிகாசங்களை கொண்ட இந்த கோயிலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சென்று வழிபட்டு வருவார்கள்.
जय बाबा बैद्यनाथ
📍देवघर, झारखंड pic.twitter.com/jIWxybPpz3
— Congress (@INCIndia) February 3, 2024
2022ஆம் ஆண்டு இந்த கோயிலுக்கு பிரதமர் மோடி சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைரலாகும் ராகுலின் புகைப்படங்கள்….
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Comments are closed.