இடஒதுக்கீட்டை தாண்டி காங்கிரஸ் கட்சியால் யோசிக்க முடியாது என பிரதமர் மோடி விமர்சித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்க்பூம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று (மே 19) கலந்துகொண்டார்.
அப்போது மேடையில் பேசிய மோடி, “வளர்ச்சி என்றால் என்ன என்பது குறித்து காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளுக்கு எதுவும் தெரியாது.
பகிர்ந்து அளிக்கிறேன் என்ற பெயரில் ஏழை மக்களின் வளத்தை கொள்ளையடிப்பது மட்டுமே அந்த இரு கட்சிகளுக்கும் தெரியும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை பறிக்க வேண்டும் என்பதே இந்தியா கூட்டணியின் நோக்கம்.
அதனைத் தாண்டி அவர்களால் யோசிக்க முடியுமா? அவர்களின் உண்மையான முகம் தற்போது வெளிப்பட்டுள்ளது.
ஜார்க்கண்டில் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் மக்களிடம் கொள்ளை அடிக்கப்படுகிறது. ஊழல்களின் தாய் காங்கிரஸ்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பற்றி பேசும்போதெல்லாம் துரதிருஷ்டவசமாக கட்டுக்கட்டான பணம் மட்டுமே நினைவுக்கு வருகிறது.
முக்தி மோர்ச்சா கட்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் நில மோசடியில் ஈடுபட்டுள்ளது. ஏழைப் பழங்குடியின மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. அவர்கள் வீட்டில் மலையளவு கைப்பற்றப்பட்ட பணம் மக்களுக்கு சொந்தமானது.
அவர்கள் திருடிய பணத்தை ஏழைகளின் கைகளில் சேர்ப்பேன். சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் என்ற பெயரில் அதனை அரசு கருவூலத்தில் சேர்க்கமாட்டேன். உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்ப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Thailand Open 2024: மீண்டும் ஒரு பட்டத்தை வென்ற சாத்விக் – சிராக்
வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
Comments are closed.