“வேட்பாளர்களை தேடும் நிலையில் காங்கிரஸ்” : மோடி தாக்கு

Published On:

| By indhu

Congress is looking for candidates - Modi attack

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேடும் நிலையில் காங்கிரஸ் கட்சி தற்போது உள்ளது என இன்று (ஏப்ரல் 6) பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் சஹாரான்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இன்று (ஏப்ரல் 6) பிரதமர் மோடி பங்கேற்று பாஜகவிற்காக வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர்,”இன்றைய இந்தியாவின் நம்பிக்கை மற்றும் எதிர்ப்பார்பில் இருந்து காங்கிரஸ் முற்றிலும் விலகி உள்ளது என்பதை காங்கிரஸ் நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கை நிரூபித்துள்ளது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முஸ்லீம் லீக்கின் முத்திரையை முழுவதுமாக தாங்கி நிற்கிறது.

பாஜக அரசு எந்தவித பாகுபாடும் இல்லாமல் செயல்படுகிறது. அரசின் திட்டங்கள் ஒவ்வொரு பிரிவினரையும், ஒவ்வொரு சாதியினரையும் என அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

https://twitter.com/i/status/1776507100845216080

மோடியாக இருந்தாலும், யோகியாக இருந்தாலும் நாங்கள் இந்தியாவின் மீதும், மக்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருக்கிறோம்.

கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளின் சிறிய தேவைகளை கூட பாஜக அக்கறையுடன் நிறைவேற்றி உள்ளது.  இந்தியா கூட்டணி கமிஷனுக்காக பணியாற்றுகிறது. பாஜக தலைமையிலான கூட்டணி மக்களுக்காக செயல்படுகிறது.

உறுதியற்ற மற்றும் நிச்சயமற்ற தன்மையின் பெயர் தான் ‘இந்தியா’ கூட்டணி. இந்தியா கூட்டணியினர் தங்களது வெற்றிக்காக உழைக்காமல், பாஜகவை 370 தொகுதிகளிலும், எங்கள் கூட்டணியை 400 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்யவே உழைத்து வருகின்றனர்.

இதனால்தான், காங்கிரஸ் கட்சியினர் அடிக்கடி வேட்பாளர்களை மாற்றுகிறார்கள். காங்கிரஸின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கூட வேட்பாளர்கள் அவர்களுக்கு கிடைப்பது இல்லை.

இதற்கு முந்தைய தேர்தலில் காங்கிரஸ் வென்ற தொகுதிகளிலும் கூட அவர்கள் வேட்பாளர்களை தேடும் நிலை தான் உள்ளது. மக்கள் தெளிவாக உள்ளனர். நிச்சயமாக இந்த தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும்.” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்து

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share