காங். கிரிஷ் சோடங்கர், திமுக கனிமொழி, பாமக சவுமியா ஒன்றாக இணைந்து வைத்த ‘பொங்கல்’

Published On:

| By Mathi

Congress DMK PMK Pongal

சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி ஆகியோர் ஒன்றாக பங்கேற்றது கவனம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில்தான் நீடிக்கிறோம்; திமுகவுடன் சுமூகப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என சென்னை வந்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியிருந்தார். இதன் மூலம் காங்கிரஸ்- தவெக கூட்டணி என்ற பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

பாமகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த பிளவுக்கே திமுகதான் காரணம் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி வருகிறார். மேலும் பாஜக- அதிமுகவின் கூட்டணியில் அன்புமணி பாமக இடம் பெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கிரிஷ் சோடங்கர், திமுக கனிமொழி, பாமக சவுமியா அன்புமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் சென்னையில் இன்று ஜனவரி 4-ந் தேதி நடைபெற்ற பொங்கல் விழாவில் ஒன்றாக கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இது தொடர்பாக கனிமொழி எம்.பி. தமது எக்ஸ் பக்கத்தில், “சென்னையில், தென்னிந்திய பத்திக்கையாளர்கள் யூனியன் சார்பில் நடைபெற்ற ஊடக பொங்கல் விழாவில்” பங்கேற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share