டிஜிட்டல் திண்ணை: சீண்டிப் பார்க்கும் ராகுல்.. காத்திருக்கும் ‘ஸ்டாலின் ஆட்டம்’.. செல்வப்பெருந்தகைக்கு சீக்கிரமே ‘வேட்டு’?

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், “கண்ணாமூச்சி ரே.. ரே.. “ என சுரத்தே இல்லாமல் முணகியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

என்னய்யா கண்ணாமூச்சி ஆட்டத்தை பார்த்தீரு?

ADVERTISEMENT

டெல்லி காங்கிரஸ் மேலிடம் ஆடி வரும் கண்ணாமூச்சி ஆட்டத்தை சொல்றேன் பொறுமய்யா.. திமுக அரசின் பெண்களுக்கு மாசம் ரூ1,000 கொடுக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எல்லா மாநிலத்துக்கும் முன்னோடி திட்டமா இருக்கு இல்லையா? இப்ப இதோட 2-ம் கட்டம் தொடங்குது.. ஏற்கனவே 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 452 (1,13,75,492) பெண்களுக்கு பணம் போய்க்கிட்டு இருக்குது.. இப்ப கூடுதலா 28 லட்சம் பெண்கள் சேர்க்கப்பட்டு இருக்காங்க..

இந்த திட்டத்தை தொடங்குவதுல இழுபறி இருந்துகிட்டே இருந்துச்சு.. ஒருவழியா நாளைக்கு சென்னை நேரு ஸ்டேடியத்துல பிரம்மாண்டமான விழா நடத்தி தொடங்கி வைக்கிறாங்க..

ADVERTISEMENT

சரிய்ய்யா.. இதுக்கும் காங்கிரஸுக்கும் என்னதான் தொடர்பு? இதுல கண்ணாமூச்சி கேம் என்னவாம்?

மேட்டருக்கு வர்றேன்யா முந்திரிகொட்டை.. இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிற நிகழ்ச்சியில ராகுல் காந்தியை பங்கேற்க வைக்க சிஎம் ஸ்டாலின் ரொம்பவே விரும்பினாரு.. ஆனால் அது நடக்காமலேயே போயிருச்சு.. என்ன நடந்தது என அறிவாலய வட்டாரங்களில் விசாரிச்சப்ப, “மாசம் ரூ1,000 கொடுக்கிறது தமிழக அரசோட திட்டம்தான்.. இப்ப தேர்தல் நேரத்துல ராகுல் காந்தியும் கலந்துகிட்டாருன்னா எலக்‌ஷனில ஒரு இம்பேக்ட் இருக்கும்.. திமுக- காங்கிரஸ் கூட்டணி பத்தின அரசல் புரசல் பேச்சுகளுக்கும் எண்ட் கார்டு போடலாம்னுதான் சிஎம் ப்ளான் போட்டாரு…

ADVERTISEMENT

இதை டெல்லியில ராகுல் காந்திகிட்ட சொல்லி டைம் கேட்டிருந்தோம்.. ராகுல் டைம் தருவாருன்னு நாங்களும்தான் ரொம்பவே வெயிட் பண்ணி பார்த்துட்டோம்.. அவரும் இந்தா சொல்றேன்.. அந்தா சொல்றேன்னு இழுத்தடிச்சுட்டு கடைசியில ரொம்ப பிஸியா இருக்கேன்ன்னு கையை விரிச்சுட்டாரு..

இதுல நம்ம சிஎம் ரொம்பவே அப்செட் ஆகிட்டாரு சார்.. இதுக்கு பிறகுதான் இனியும் தள்ளிப்போட வேணாம்னு நாளைக்கு (டிசம்பர் 12) தொடங்கிடலாம்னு முடிவு செஞ்சாங்க..

பார்லிமெண்ட் நடக்குதுன்னு ராகுல் சைடுல இருந்து முதல்ல சொன்னப்ப கூட, டிசம்பர் 19-ந் தேதி பார்லிமெண்ட் செஷன் முடிஞ்சிரும்.. அதுக்கு அடுத்த வெச்சுக்கலாம்னு யோசிச்சோம்.. ஆனா ராகுல்கிட்ட இருந்து ‘சிக்னலே’ வரலை.. அதனால நாளைக்கு நிகழ்ச்சி நடக்குது..

நாடாளுமன்றத்துல எல்லா எம்.பிக்களும் சகஜமா பேசும் போது பாஜக சைடுல, “ஏன் இன்னமும் காங்கிரஸை தூக்கி சுமக்குது திமுக? கழற்றிவிட்டா மத்திய அரசுடன் இணக்கமா போகலாம்தானே.. காங்கிரஸ் கட்சிக்கு ஆக்சிஜன் கொடுக்கிறதே நீங்கதான்”ன்னு தொடர்ந்து திமுக எம்.பிக்கள்கிட்ட சொல்லிகிட்டுதான் இருக்காங்க..

எங்க மா.செ.க்களில் பலரும் கூட சீனியர் அமைச்சர்கள்கிட்ட, “எதுக்குண்ணே இன்னமும் காங்கிரஸ் லக்கேஜை இழுக்கனும். தலைவர்கிட்ட சொல்லி கழற்றிவிடப் பாருங்கண்ணே”ன்னு சொல்றாங்க.. ஆனாலும் நாங்க எப்பவும் போலதான் இருக்கிறோம்..” என்கின்றனர்.

காங்கிரஸின் இந்த மூவ்கள் பற்றி சிஎம் ஸ்டாலின், சீனியர் அமைச்சர்களிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இது தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த அமைச்சர் ஒருவர், ”ராகுல் காந்தியும் காங்கிரஸும் இப்படி எல்லாம் போக்கு காட்டுறதே எலக்‌ஷனில கூடுதலா சீட் வாங்கிட முடியும்னு நினைச்சுகிட்டு செய்யுறதுதான்.. அவங்க என்ன 40 சீட்டுல ஆரம்பிச்சு 30-ல் வந்து நிப்பாங்க.. நாம 20 சீட்டுல ஆரம்பிச்சு 25-ல் நிப்போம்.. இதுதான் நடக்கும்னு சிஎம் ஸ்டாலின் எங்ககிட்ட சொன்னாரு.” என்கின்றனர்.

மற்றொரு மூத்த அமைச்சர் நம்மிடம் பேசும் போது, “சிஎம் ஸ்டாலின் ஒரு விஷயத்தையும் அழுத்தமாகவும் திரும்ப திரும்பவும் சொல்லிகிட்டு இருக்காரு. அதாவது போன 2021-ல் காங்கிரஸ் ஜெயிச்ச 18 தொகுதிகளில்ல 12 இடங்களை திருப்பியும் அவங்களுக்கே கொடுத்தா நிச்சயம் எதிர்க்கட்சிதான் ஜெயிக்கும்.. அந்த அளவுக்கு ஒர்ஸ்ட் ஆக இருக்குது.. அந்த தொகுதிகளை எல்லாம் காங்கிரஸிடம் இருந்து மாத்திவிடனும்.. அப்பதான் பேலன்ஸ் ஆகும். காங்கிரஸ்தான்னு இல்லை.. விசிகவுல கூட 4 தொகுதிகளில் 2 இடங்களை மாத்தனும்.. லெப்ட் பார்ட்டி சீட்டுகளில பிரச்சனை இல்லை”ன்னும் சிஎம் சொன்னாரு.. அதே போலத்தான் விஜய்யை காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பார்க்கிறது, புகழ்ந்து பேசுறது எல்லாமே இந்த சீட் பேரத்துக்கு மட்டும்தான்னு சிஎம் எங்ககிட்ட சொன்னாரு” என்கின்றனர்.

காங்கிரஸுல விருப்ப மனு எல்லாம் வாங்குறாரே செல்வப்பெருந்தகை?

ஆமா.. 234 தொகுதிக்கும் விருப்ப மனு வாங்க தொடங்கி இருக்கிறாரு செல்வப்பெருந்தகை. ஆனாலும் டெல்லி மேலிடமோ, “திமுக கிட்ட சாப்ட் அப்ரோச்சில இருக்கிறாரு செல்வப்பெருந்தகை.. ஸ்டிராங்கா பேசி அதிகமாக சீட் வாங்குற மாதிரி தெரியலை.. அதனால செல்வப்பெருந்தகைக்கு பதிலா வேறு ஒருத்தரை போட்டுவிட்டால்தான் சரியா வரும்.. அதனால செல்வப்பெருந்தகை தலைக்கு மேலே கத்தி தொங்குது” என சோர்ஸ்கள் சொல்லுதுன்னு ஷேர் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைனுக்குள் அடங்கியது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share