நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை 2 நாட்களில் முடிவு செய்வோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால் இன்னும் எந்தெந்த தொகுதி என முடிவு எட்டப்படவில்லை.
இதுகுறித்து சென்னை சத்யமூர்த்திபவனில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் இந்தமுறையும் போட்டியிடுவோம். ஒரு சில தொகுதிகள் மாற வாய்ப்புள்ளது.
திமுகவுடன் கூட்டணி தொகுதி ஒதுக்கீடு உடன்பாடு இன்னும் 2 நாட்களில் முடிவடையும். தேர்தலில் போட்டியிட புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும்” என கூறினார்.
மேலும் அவர், “தேர்தல் தேதி அறிவிக்கப்படுவது தள்ளிக்கொண்டே போகிறது. இதுபற்றி பிரதமர் மோடிக்கு கவலை இல்லை. அவரது கவலை எல்லாம் பாசிச பாஜக ஆட்சி நடத்துவது பற்றி தான். எனவே, பொதுமக்கள், மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருகிறார். அப்போது அந்த மேடைகளில் அவர் தமிழகத்திற்கு செய்த திட்டங்களை பற்றி குறிப்பிடாதது ஏன்?.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு செய்த திட்டங்களை வெளிப்படையாக சொல்கிறார். ஆனால், மோடி அவ்வாறு சொல்லவில்லை. எனவே தமிழக மக்களுக்கு மத்திய அரசு என்ன செய்தது என்று பிரதமர் மோடி பட்டியலிட வேண்டும்” என வலியுறுத்தினார்.
-இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
AK 63: ‘கொல மாஸ்’ 22 ஆண்டுகளுக்கு பிறகு… அஜித் செய்த சம்பவம்!
போதைப்பொருள் விவகாரம்… எடப்பாடி மீது மான நஷ்ட ஈடு வழக்குத் தொடர்ந்த திமுக!
Lokesh Kanagaraj: ‘ரியல் வெறித்தனம்’ டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் லோகேஷ்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு… உச்ச நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மேல்முறையீடு!