மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்?

Published On:

| By Kavi

2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது. 

இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார்.

காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்

களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் 

காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும் முன்னிலையில் நிற்கிறார்.

அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன.

1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.

மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்  minnambalam.com வலைதளத்தில்

சிவகங்கை சீமையை வெல்வது யார்? | Minnambalam Mega Survey 2024 | Sivagangai | Elections 2024

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்?

மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர்… பட்டாசு கொளுத்துவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி?

மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share