ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம்தோறும் 2100 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளனர்.
அடுத்த மாதம் ஹரியானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு காங்கிரஸ் நேற்று தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது.
அதில், மாதம்தோறும் பெண்களுக்கு 2000 ரூபாய், 300 யூனிட் இலவச மின்சாரம், 25 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
இந்தநிலையில் 100 ரூபாய் சேர்த்து பாஜக ஆட்சிக்கு வந்தால் மாதம் தோறும் பெண்களுக்கு ரூ.2100 வழங்கப்படும் என்று அக்கட்சித் தேசிய தலைவர் நட்டா இன்று (செப்டம்பர் 19) தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், ஹரியானாவில் 10 தொழில் நகரங்கள் கட்டமைக்கப்படும். ஒவ்வொரு நகரத்திலும் சுமார் 50,000 உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் வரை இலவச காப்பீடு வசதி.
மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வசதி, இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை, 5 லட்சம் இளைஞர்களுக்கு தனியாரில் வேலை.
வீடற்றவர்களுக்கு 5 லட்சம் புதிய வீடுகள் கட்டி தரப்படும்.
அரசு மருத்துவமனைகளின் டயாலிஸில் சிகிச்சை. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, கிராமப்புறங்களில் இருந்து கல்லூரிகளுக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தார் நட்டா.
நேற்று காங்கிரஸ் 2000 ரூபாய் அறிவித்த நிலையில் இன்று பாஜக 2100 ரூபாய் அறிவித்ததற்கு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
-பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரபல யூடியூபர் டேன்மே பட் எடை குறைத்தது எப்படி? ஆச்சரியத் தகவல்கள்!
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி… தா.மோ.அன்பரசன் சொன்ன முக்கிய தகவல்!
மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் : எடப்பாடி
ஹெல்த் டிப்ஸ்: திடீர் காய்ச்சல்… உடனடி தீர்வு உண்டா?
தினமும் 3 மணி நேரம் மட்டுமே உறக்கம்… பைக்கிலேயே உயிரிழந்த ஆர்டர் கிங்!
Comments are closed.