மருத்துவரின் கண்டனம்…. சர்ச்சைப் பதிவை நீக்கிய நயன்தாரா

Published On:

| By Kavi

செம்பருத்தி டீ குறித்து நயன்தாரா வெளியிட்ட பதிவு சர்ச்சையாகி இருக்கும் நிலையில், தற்போது அதை அவர் நீக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் அவர் செம்பருத்தி  டீ குறித்து பதிவிட்டு இருந்தார்.

செம்பருத்தி பூ டீ எனக்கு மிகவும் பிடித்தமானது என்று தெரிவித்த நயன்தாரா. இதில் நிறைய ஆரோக்கிய குணங்கள் உண்டு. வைட்டமின் நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. இது மழை காலத்திற்கு ஒரு சிறந்த பானமாகும்.

செம்பருத்தி டீ அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான உடல்நல பிரச்சனைக்கு உதவியாக இருக்கும். முகப்பரு போன்ற தோல் பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும் என்று ஹெல்த் டிப்ஸ் கூறியிருந்தார்.

இந்த டிப்ஸை தனக்கு  ஊட்டச் சத்து நிபுணரான முன்முன் கனேரிவால் பரிந்துரைத்ததாக அவரை பாராட்டியிருந்தார்.இந்நிலையில் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள டாக்டர் ஃபிலிப்ஸ்,  ” நடிகை நயன்தாரா, சமந்தாவை காட்டிலும் அதிகம் பின் தொடர்பவர்களை கொண்டுள்ளார். 8.7 மில்லியன் ஃபாலோயர்ஸ் கொண்ட இவரது இன்ஸ்டாவில் தவறான குறிப்பை பதிவிட்டுள்ளார்.

செம்பருத்தி டீ அருந்துங்கள். அது நன்றாக இருக்கும் என்று சொல்வதோடு நிறுத்தி இருக்கலாம். ஆனால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவைக்கு நல்லது. ஃப்ளூவில் இருந்து காக்கிறது என கூறியிருக்கிறார்.

செம்பருத்தி டீயின் குணங்கள் என்று நயன்தாரா குறிப்பிட்ட எதுவுமே  அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாதவை. இதை தொடர்ந்து குடிப்பதனால் ஆண்கள், பெண்களுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

நயன்தாரா ஆயுர்வேத  முறையே வாழ்க்கையை வழிநடத்திச் செல்லும் என்கிற புரிதலில்  போலியான தகவல்களை பகிர்ந்துள்ளார். மக்கள் மருத்துவர்கள் சொல்லும் பரிந்துரைகளைக் கேட்டு நடக்கவும். இதுபோன்று பதிவிடுபவர்களின் குறிப்புகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்’  என்று குறிப்பிட்டிருந்தார்.

மருத்துவரின் இந்த பதிவை தொடர்ந்து நயன்தாரா தனது இன்ஸ்ட்டாவில் பதிவிட்ட குறிப்பை நீக்கினார். இதைத்தொடர்ந்து மருத்துவர் ஃபிலிப்ஸ், “நயன்தாரா அந்த பதிவை நீக்கிவிட்டார். மன்னிப்பு கேட்கவில்லை. தனது பதிவுக்கு பொறுப்பேற்கவில்லை. பொது சுகாதாரத்தின் மீதான இதுபோன்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை தடுக்க சட்டங்கள் தேவை”  என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக வைரஸ் பாதிப்புகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைட் நெபுலைசேஷன் மருந்தை தனக்கு தனது மருத்துவர் பரிந்துரைத்ததாக சமந்தா பரிந்துரைத்திருந்தார். இந்தப் பதிவுக்கும் மருத்துவர் பிலிப்ஸ் கண்டனம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நாடாளுமன்றத்தில் ராகுல் அட்டாக்: தலையில் கைவைத்த நிர்மலா சீதாராமன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share