மழைநீரை அகற்றாமல் கான்கிரீட்: இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட்!

Published On:

| By Kalai

தாம்பரத்தில் மழைநீரை அகற்றாமல் பள்ளத்தில் கான்கிரீட் போடப்பட்ட விவகாரத்தில் இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, குரோம்பேட்டை, 36 வது வார்டு புருஷோத்தம நகர், இரண்டாவது பிரதான சாலையில் மழைநீர் வெளியேறுவதற்கான சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

அப்போது அங்கு பள்ளத்தில் தேங்கிய மழைநீரை அகற்றாமல் கான்கிரீட் போடப்பட்டது.

மழைநீரை வெளியேற்றும் மோட்டார் ஒருபக்கம் தண்ணீரை உறிஞ்சி கொண்டிருக்க, அதேசமயம் சிமென்ட் கலவையுடன் கான்கிரீட்டும் கொட்டப்பட்டு வந்தது.

ADVERTISEMENT

இதனால் சிமென்ட் தண்ணீரில் கலந்து வெளியேறி வெறும் கற்கள் மட்டும் தங்கியது. இதைப்பார்த்த பொதுமக்கள் அங்கிருந்தவர்களிடம் கேள்வி கேட்டபோதும் எங்களுக்கு பணிகளை வேகமாக முடிக்க சொல்லி இருக்கிறார்கள் என்று கூறி அலட்சியமாக செயல்பட்டு இருக்கிறார்கள்,

மழை நீரை முழுவதும் வெளியேற்றாமல் கான்கிரீட் கலவை கொட்டப்பட்டதை சிலர் வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக புகாரும் சென்றது.

ADVERTISEMENT

இதையடுத்து தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலத்தில் பணியாற்றி வந்த இளநிலை பொறியாளர்  வெங்கடேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இருசக்கர வாகனம், ஜீப், அடிகுழாய் என அப்படியே கான்கிரீட் போடப்பட்ட சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறியுள்ளன.

கலை.ரா

போக்கஸில் சிக்கிய அஸ்வின்: கலாய்க்கும் ரசிகர்கள்!

இமாச்சல் தேர்தல்: பாஜகவில் காங்கிரஸ் தலைவர்கள் திடீர் ஐக்கியம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share