அரசு தேர்வுக்கு தயாராகுகிறீர்களா?: வெளியான முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

Computer on Office Automation

அரசு கணினி தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று  தொழில்நுட்ப கல்வித் துறை அறிவித்துள்ளது. Computer on Office Automation

கோவா – Certificate course in Computer on Office Automation-COA என்ற கணினி தேர்வு தொழில்நுட்ப கல்வித் துறையால் ஆண்டுதோறும் நடத்தப்படும். 

இந்த ஆண்டு புதிய பாடத்திட்டங்களுடன் வரும் ஜூன் மாதம் இந்த தேர்வு நடத்தப்படவுள்ளது. 

இந்த தேர்வை எழுதுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி இந்த தேர்வுக்கு  நாளை – 16.04.2025 முதல் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி நாள் –  11.05.2025

தேர்வு தேதி (Theory) 14.06.2025

செய்முறை தேர்வு (Practical) 15.06.2025 ஆகிய நாட்களில் நடைபெறும். 

தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் . 

இந்த தேர்வுக்கு ரூ.1030  கட்டணமாக செலுத்த வேண்டும்.

இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள்   www.tndtegteonline.in என்ற இணையதள லிங்க்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 

கூடுதல் விவரங்களுக்கு www.dte.tn.gov.in என்ற  தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் இணையதள லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். 

அரசு துறைகளில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு இந்த கணினி தேர்வு சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குருப்-4 தேர்வில் வெற்றிபெற்று, பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அவர்கள் தங்களின் தகுதிகாண பருவத்துக்குள் அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகளுக்கு இந்த  கணினி சான்றிதழ் கட்டாயம் கிடையாது. 

தமிழக அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், உதவியாளர் பதவிகளுக்கும் அரசு கணினி சான்றிதழ் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. Computer on Office Automation

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share