வருமான வரி தொடர்பான புகார்களுக்கு மின்னஞ்சல் முகவரிகள்!

Published On:

| By Balaji

வருமான வரி தொடர்பான புகார்களை தெரிவிக்க வருமான வரித் துறை சார்பில் மூன்று மின்னஞ்சல் முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டு வருமான வரித் துறை சார்பில் முகமறியா வரி மதிப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் கணினி மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்கள் தன்னிச்சையாக ஆய்வு செய்யப்பட்டு, அதில் தரப்பட்டுள்ள தகவல்களில் குளறுபடிகள் இருந்தால், அது குறித்து ஆய்வு செய்ய ஏதாவது ஒரு நகரில் உள்ள வருமான வரி அதிகாரிக்கு அனுப்பப்படும். அந்த அதிகாரி ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை தன்னிச்சையாக வேறு ஒரு நகரைச் சேர்ந்த வருமான வரி உயரதிகாரிக்குச் செல்லும்.

ADVERTISEMENT

இந்த நடைமுறையால் வருமான வரி தொடர்பான குறைகளுக்கு, ஒருவர் தன் வட்டார வருமான வரி அதிகாரியை நேரில் சந்திக்க தேவையில்லை. இந்தத் திட்டத்தில் யாருடைய வருமான வரி கணக்கு தாக்கலை, யார் ஆய்வு செய்கின்றனர் என்பது தெரியாது. இதனால் வரியைக் குறைத்து மதிப்பீடு செய்வது உள்ளிட்ட ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தத் திட்டத்தில் வரி மதிப்பீடு தொடர்பான புகார்கள், அபராதம், மேல்முறையீடு ஆகியவற்றுக்கு மூன்று மின்னஞ்சல் முகவரிகளை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி வரி மதிப்பீடு புகாரை samadhan.faceless.assessment@incometax.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

அபராதம் தொடர்பான குறைகளுக்கு samadhan.faceless.penalty@incometax.gov.in மற்றும்

ADVERTISEMENT

மேல்முறையீட்டுக்கு samadhan.faceless.appeal@incometax.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிகளைத் தொடர்பு கொள்ளலாம் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share