current affairs tamil zika

ஜிகா வைரஸ் பரவல் : மத்திய அரசு எச்சரிக்கை

போட்டித்தேர்வுகள்

மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. (current affairs tamil zika 

  • மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 2 கர்ப்பிணிகள் உட்பட 7 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • டெங்கு சிக்குன் குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் மூலமாகவே ஜிகா வைரஸ் பரவி வருகிறது.

ஜிகா வைரஸ் அறிகுறிகள் என்னென்ன? (current affairs tamil zika)

  • இந்த வைரஸ் தொற்றால் உயிரிழப்புகள் ஏற்படுவது அரிது. தொற்று ஏற்பட்டவர்களில் ஐந்தில் ஒருவருக்குதான் அறிகுறிகள் தோன்றுவதாக கருதப்படுகிறது.
  • லேசான காய்ச்சல்  கண் சிவத்தல் வீக்கம் தலைவலி மூட்டு வலி தோல் சிவத்தல் அரியவகை கில்லன் பா சின்ட்ரோம் மூலம் ஏற்படும் தாற்காலிக பக்கவாதம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள்.
  • இதற்கு தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லை. எனவே நோயாளிகள் ஓய்வு எடுத்துக் கொண்டு தண்ணீர் அருந்தவேண்டும்.

ஜிகா வைரஸ் எங்கிருந்து வந்தது?

  • 1947ம் ஆண்டு உகாண்டா நாட்டில் குரங்குகளில் முதல் முறையாக இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1954ம் ஆண்டு நைஜீரியாவில் முதல் முதலாக மனிதர்களிடத்தில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
  • அதைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா தென்கிழக்கு ஆசியா பசிபிக் தீவுகள் ஆகிய பகுதிகளில் தொற்று பரவியது. இதெல்லாம் சிறிய அளவில் பரவியவையே.
  • இதற்கு முன்பு மனித உடல் நலனுக்கு அச்சுறுத்தலாக ஜிகா வைரஸ் கருதப்பட்டதில்லை.
  • ஆனால் 2015ல் பிரேசிலில் பரவியது முதல் இந்த நோய் வேகமாகப் பரவிவருகிறது.

இந்த நோய் எப்படிப் பரவுகிறது?

  • ஏடீஸ் வகை கொசு மூலம் இது பரவுகிறது. டெங்கு சிக்குன்குன்யா நோய்களைப் பரப்புவதும் இதே வகை கொசுக்கள்தான்.
  • கனடா சிலி தவிர அமெரிக்க கண்டம் முழுவதிலும் ஆசியா முழுவதிலும் இந்த கொசுக்கள் காணப்படுகின்றன. கனடா சிலி ஆகிய இரு நாடுகளும் இந்தக் கொசுக்கள் வாழ முடியாத அளவுக்கு குளிர்ச்சியானவை மலேரியாவை பரப்பும் கொசுக்களைப் போல அல்லாமல் இவை பகல் பொழுதில் செயல்படுகிறவை.
  • தொற்று ஏற்பட்ட ஒருவரை இவை கடித்த பிறகு கடிக்கிற நபர்களுக்கு இந்த தொற்றை அவை பரப்பும்.
  • பாலுறவின் மூலமாகவும் ஜிகா வைரஸ் பரவும் சாத்தியம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

மாணவர்களுக்கான குறிப்பு:

1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. அறிவியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.

-பூஜா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

காற்று மாசுபாட்டால் டெல்லியில் ஆண்டுக்கு 12,000 பேர் உயிரிழப்பு

வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்

ஸ்மார்ட் சிட்டி இயக்கம் நீட்டிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0